250. க்ரீமி லேயர் குறித்து
உச்ச நீதிமன்றம் தனது சமீபத்திய தீர்ப்பில் SC/STக்கான (அரசுப்பணியில் பதவி உயர்வுக்கான) இடஒதுக்கீட்டில் க்ரீமி லேயரை வரையறுப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது (தீர்ப்பின் முடிவாக இதைக் கூறவில்லை என்பது அறியத்தக்கது). இருந்தாலும், இது நிச்சயம் தேவையில்லாத ஒன்றே ! இத்தனை ஆண்டுகள் இடஒதுக்கீடு அமலில் இருந்தும் தலித் மற்றும் பழங்குடியினரின் பிரநிதித்துவம் பல துறைகளிலும் (முக்கியமாக உயர் பதவிகளில்) மிகக் குறைவாகவே உள்ளது என்பது கண்கூடு. அவர்களில் சிலர் நல்ல பதவியில் இருந்தாலும், உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை ! அவர்களில் பெரும்பாலோர் (90 சதவிகிதத்துக்கும் மேலே) சமூகத்தில் உரிய அந்தஸ்து இன்னும் பெறவில்லை என்பதும் நிதர்சனம்.
OBC-க்கான க்ரீமி லேயர் 1992-இல் மண்டல் தீர்ப்பின்போது உச்ச நீதி மன்றத்தால் வரையறுக்கப்பட்டது. அதன் மூலம், OBC பிரிவில், உச்ச/உயர் நீதி மன்ற நீதிபதிகள், UPSC உறுப்பினர்கள், குரூப் A/B, கிளாஸ் I அல்லது II மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர்கள், பொதுத்துறை நிறுவன (PSU) அதிகாரிகள், ராணுவத்தில் கர்னல் பதவிக்கு மேல் இருப்பவர்கள் ஆகியோரது பிள்ளைகள் க்ரீமி லேயராக அறிவிக்கப்பட்டு, இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்பட்டனர். மேலும், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் சில புரொபஷனல் துறைகள் சார்ந்த வல்லுனர் ஆகியோரின் பிள்ளைகளும், வருடத்திற்கு இரண்டரை லட்சம் வருமானம் உள்ளவரின் பிள்ளைகளும், மண்டல் க்ரீமி லேயரில் அடங்குவர். OBC விஷயத்தில் இது தேவையான ஒன்றே.
ஆனால், இன்ன பிற பிற்படுத்தப்பட்டவருடன் ஒப்பு நோக்கும்போது சமூக நீதி என்ற இலக்கை அடைய தலித்துகள் பத்து மடங்கு தூரம் பயணிக்க வேண்டும் என்று நிச்சயம் கூற முடியும் ! தலித்துகளின் அவல நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. SC/ST க்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் பல அரசுத் துறைகளில் பல காலமாக நிரப்பப்படாமல் இருப்பதையும் பார்க்கிறோம் ! மேலும், தற்போதைய தீர்ப்பு, SC/ST-க்கான க்ரீமி லேயரை வரையறுப்பது குறித்து தெளிவாக எதுவும் சொல்லவில்லை. OBC-க்கான க்ரீமி லேயர் வரையறுத்தலை தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் அப்ளை செய்வது சரியானதல்ல, ஏற்றுக் கொள்ளத் தக்கதும் அல்ல ! இதனால் குழப்பமே மிஞ்சும்.
அடுத்து, அரசுப்பணிகளில் OBC-க்கான இடஒதுக்கீட்டில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள க்ரீமி லேயர் விஷயத்தை, தற்போது நடைமுறைக்கு வர உள்ள, உயர் கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீட்டிலும் எடுத்து வருவதற்கு, ஓட்டு அரசியலில் பேர் போன சிறிதும் பெரியதுமான பல அரசியல் கட்சிகள் (கம்யூனிஸ்டுகள் தவிர்த்து!) கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இடஒதுக்கீட்டை நீர்த்து போக வைக்கும் முயற்சி என்றும் குற்றம் சாட்டுகின்றன ! க்ரீமி லேயர் வரையறுக்கப்படாமல் உயர் கல்வி நிறுவன இடஒதுக்கீடு (2007-இல்) அமலுக்கு வந்து, பின்னாளில் இது தொடர்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டால், நீதிமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் இடையே இன்னொரு பிரச்சினை உருவாக வாய்ப்புள்ளது.
இறுதியாக, இப்போதுள்ள உயர் சாதியினர் / இன்ன பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகிய இரு தரப்பினரிடமும், தலித்துகளுடன் சமூக வளங்களை / பயன்களை சமமாக பங்கிட்டுக் கொள்வதில் பொதுவாக ஒரு மனத்தடை நிலவுகிறது என்பது உண்மை. தலித் மற்றும் பழங்குடியினரின் அவலமும், அவர்கள் சந்திக்கும் வன்கொடுமைகளும் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்க, எல்லாரும் வாய் வார்த்தையாக, நமக்கு அவற்றில் எந்த பொறுப்பும் இல்லை என்ற வகையில் பேசிக் கொண்டிருக்கிறோம் !!! தலித்துகளை பொருத்தவரை, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டையே அவர்களால் இன்று வரை நியாயமாக அனுபவித்து பயன் பெற முடியவில்லை ! அப்புறம் என்ன SC/ST யில் க்ரீமி லேயர் ??? எந்த விதத்தில் பார்த்தாலும், அவர்களில் க்ரீமி லேயர் என்பதற்கு தகுதியானவர் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் இருப்பர் என்று அறுதியிட்டு கூற இயலும்.
என்றென்றும் அன்புடன்
பாலா
26 மறுமொழிகள்:
Test !
சரியான கருத்தை வைத்திருக்கிறீர்கள்..
ஆனால் OBC விஷயத்தில் creamy layer சலுகை பெறுவது அயோக்யத்தனம்.
பணமும்,பதவியும்.செல்வாக்கு எல்லாம் இருந்தும் பிச்சை எடுப்பதற்கு சமம் அது.
பாலா
250-ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்!
நன்றி, பாலா, இராமநாதன்
சரியான கருத்துக்கள் ...
தரமான கருத்துக்கள்....
250க்கு வாழ்த்துக்கள் பாலா......
சற்று முன் பார்த்த சன் நியூஸ் செய்தி:
திரு.கருணாநிதி உச்சநீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து பிற மாநில முதல்வர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாகவும், மாநிலங்கள் தீர்ப்பு பற்றிய தங்கள் நிலைப்பாட்டை உச்ச நீதி மன்றத்தில் முன் வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பதாகவும் செய்தி. கடிதத்தில் சமூக நீதி அமைய வேண்டியே இடஒதுக்கீடு, அதை பொருளாதார ரீதியாக பார்க்கக் கூடாது என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்.
உச்ச நீதி மன்றத்தின் தற்போதைய தீர்ப்பு தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான பதவி உயர்வுக்கான இடஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் வரையறுத்தல் பற்றியது மட்டுமே. திரு.கருணாநிதியோ ஓட்டு வங்கியான பிற்படுத்தப்பட்டவரையும் கடிதத்தில் குறிப்பிடுவதிலிருந்து, அவரது நோக்கம் தெளிவாகப் புரிகிறது ... திருமாவுக்கு தேர்தலில் இரண்டு சீட் கொடுக்காமல் அலைக்கழிப்பார். SC,ST இடஒதுக்கீட்டில் க்ரீமி லேயரை விலக்குவது நியாயமல்ல என்ற போர்வையில் பிற்படுத்தப்பட்டவரில் க்ரீமி லேயரை பாதுகாக்கவே இந்த மடல் டிராமா...
see my blog
மௌல்ஸ், அனானி,
நன்றி !
அனானி2,
//உச்ச நீதி மன்றத்தின் தற்போதைய தீர்ப்பு தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான பதவி உயர்வுக்கான இடஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் வரையறுத்தல் பற்றியது மட்டுமே. திரு.கருணாநிதியோ ஓட்டு வங்கியான பிற்படுத்தப்பட்டவரையும் கடிதத்தில் குறிப்பிடுவதிலிருந்து, அவரது நோக்கம் தெளிவாகப் புரிகிறது ... திருமாவுக்கு தேர்தலில் இரண்டு சீட் கொடுக்காமல் அலைக்கழிப்பார். SC,ST இடஒதுக்கீட்டில் க்ரீமி லேயரை விலக்குவது நியாயமல்ல என்ற போர்வையில் பிற்படுத்தப்பட்டவரில் க்ரீமி லேயரை பாதுகாக்கவே இந்த மடல் டிராமா...
//
கடிதம் பற்றி நல்ல புரிதல் உங்களுக்கு :)
Ravi,
Thanks, will read your posting.
பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கேட்கும் பார்ப்பனர்கள் - பார்ப்பனர்களே ஏகபோக உரிமை கொண்டாடும் பொதுப்பட்டியலில் கிரீமி லேயர் கேட்க மறந்தது ஏனோ ?!
அருள்
from பிலிப்பைன்ஸ்
www.socialjustice.in
//பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கேட்கும் பார்ப்பனர்கள் - பார்ப்பனர்களே ஏகபோக உரிமை கொண்டாடும் பொதுப்பட்டியலில் கிரீமி லேயர் கேட்க மறந்தது ஏனோ ?!
//
This posting says that there is no need to remove SC/ST creamy layer from reservation eligibility. Please read again !
Test !
//ஆனால், இன்ன பிற பிற்படுத்தப்பட்டவருடன் ஒப்பு நோக்கும்போது சமூக நீதி என்ற இலக்கை அடைய தலித்துகள் பத்து மடங்கு தூரம் பயணிக்க வேண்டும் என்று நிச்சயம் கூற முடியும் ! தலித்துகளின் அவல நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.//
//இறுதியாக, இப்போதுள்ள உயர் சாதியினர் / இன்ன பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகிய இரு தரப்பினரிடமும், தலித்துகளுடன் சமூக வளங்களை / பயன்களை சமமாக பங்கிட்டுக் கொள்வதில் பொதுவாக ஒரு மனத்தடை நிலவுகிறது என்பது உண்மை. தலித் மற்றும் பழங்குடியினரின் அவலமும், அவர்கள் சந்திக்கும் வன்கொடுமைகளும் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்க, எல்லாரும் வாய் வார்த்தையாக, நமக்கு அவற்றில் எந்த பொறுப்பும் இல்லை என்ற வகையில் பேசிக் கொண்டிருக்கிறோம் !!! //
இந்த மாதிரி உண்மை நெலவரத்தை எழுதி, நம்ம சமூக நீதிப் பதிவர் கூட்டத்தோட வாயை அடைத்து விட்டீர்களே ;-)
Bala Nice Posting, reflecting the day today happenings for SC/ST people. In my view it will take few decades to change.......
I remember reading an article in express way back in 1998 saying that lot of SC/ST (Definitely not OBC, all the OBC people are busy in some activities in town and cities)people in the villages don't even know that they have reservations .Even if they know ,they don't have (good) schools to go for education.
We (government) should take interest to build good schools and bring awareness among the people.
As for as creamy layer is concerned, looking into the statistics of the vacancies not filled in the government positions (I believe there was a law suit to fill this position from other communities), I would say we should avoid creamy layer for SC/ST.
As for as social justice, treating equally, I think we need stronger discrimination laws.
With best
CT
P.S: To Mr. Philippines ARUL,
Not only had you misunderstood the post, but also you misunderstood what is open competition. Please do take time to read how many FC people are getting Seats in MBBS and in Engineering, What is the percentage of the FC people in open competition.
CT,
Thanks for your views and your understanding of the crux of this issue.
As always, there will be people, for and against the views expressed in this post.
250 ஆ? பதிவிலும் பின்னூட்டத்திலும் அநியாய பொறுமை உங்களுக்கு! வாழ்த்துக்கள் பாலா.
Thanks, Swamy :)
test !
This particular posting is not getting refreshed / updated after a comment is published !!!
Read the following news. Majority of the PARPANS think that General Quota is PARPANS’ Quota!
ARUL
from Doha, Qatar - ‘International Conference on New or Restored Democracies’
www.icnrd6.com
"மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கு ---திருச்சி பெல் நிறுவனத்தில் தச்சர், பெயிண்டர், வெல்டர், டர்னர் போன்ற திறமை தேவைப்படும் வேலையிடங்களில் ஆள் நிரப்புவது சம்பந்தமாக, அதுவும் கைக்கொள்ளப்பட்ட இட ஓதுக்கீடு குறித்து. காலியிடமான 250 பதவிகளில் 48 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் 68 இடங்கள் பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கும் ஒதுக்கப்பட்டது சரிதான். ஆனால் பிறழ்சினை ‘தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடங்களில்தான் போட்டியிட முடியும்’ என்று பெல் நிறுவனம் கூறுவதில் ஆரம்பித்தது. காரணம் தாழ்த்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் மற்றவர்களை விட தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுவிட்டனராம். எனவே, ஒதுக்கீடு செய்யப்பட்ட 116 இடங்கள் தவிர பிற இடங்களில் தாழ்த்தப்பட்டவர் அல்லது பிற்ப்படுத்தப்பட்டவர் அல்லாத மற்றவர்கள் மட்டுமே தேர்வுக்காக அழைக்கப்பட்டனர். இன்னும் என்னன்னவோ விளங்காத தேர்வு முறைகளை பெல் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
வழக்கு நடைபெறுகையில், பெல் நிறுவனத்தின் வாதமாக அவர்களது சீனியர் வழக்குரைஞர் கூறிய வாதங்களும், பெல் நிறுவன கூடுதல் பொது மேலாளரின் பிரமாண பத்திரத்தில் (affidavit) இருந்து வாசிக்கப்பட்ட சில வரிகளும் அவர்களது நோக்கம் என்ன என்பதை ஓரளவுக்கு தெளிவாக்கியது.
“வழக்கத்திற்கு மாறாக இந்த முறை தாழ்த்தப்பட்டவர்களின் கட் ஆஃப் மதிப்பெண்கள் பொது ஒதுக்கீட்டின் கட் ஆஃப் மதிப்பெண்களை விட அதிகமாக இருந்தது” கூடுதல் பொது மேலாளரின் பிரமாண பத்திரத்தில்.
“விட்டால், மொத்த இடத்தின் 73% இடங்களை தாழ்த்தப்பட்டவர்களே பிடித்து விடுவார்கள்” பெல் நிறுவன சீனியர் வழக்குரைஞர்.
“தாழ்த்தப்பட்டவர்கள் தேர்வுக் கட்டண விலக்கு, வயது தளர்த்துதல் போன்ற பிற சலுகைகளைப் பெறுகின்றனர். இந்த சலுகைகளைப் பெறும் வண்ணம் விண்ணப்பித்து விட்டு அவர்கள் பொது ஒதுக்கீட்டில் வர முடியாது” பிரமாண பத்திரத்தில்.
“பிற மாநிலங்களில் இவ்வாறுதான் நடக்கிறது. அலகாபத்தில் இது போன்றதொரு வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால தடைக்கு எதிரான மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம், இடைக்கால தடைக்கு தடை வழங்கி உள்ளது” பெல் நிறுவன சீனியர் வழக்குரைஞர்.
முதலில் தேர்வுக்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம். பின்னர் பெல் தனது சீனியர் வழக்குரைஞரை அழைத்து வந்து காலியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால் உற்பத்தி பாதிக்கும் என்று வாதிட்டது. எனவே தேர்வு செய்யப்பட்டவர்களை ‘வழக்கின் முடிவிற்கேற்ப’ பணியில் சேர அனுமதிக்குமாறு தடை உத்தரவினை தளர்த்தியது. நேற்று வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது."
http://marchoflaw.blogspot.com/2006/10/blog-post_20.html
Arul,
Thanks !
What is happening in BHEL needs to be condemned, no doubt about it !!!
But, that has no relevance to what I have written about creamy layer. Pl. tell me whether you support creamy layer in OBC.
These BCs and MBCs think that all quota i.e 100% reservation is for them.The post by Mr.Rajadurai gives incomplete
information.How can you come to any
conclusion from that.
Thanks, Anony !
What I know is what I read and understood from Mr.Rajadurai's posting, that's all.
Post a Comment